Election 2024
இறுதி கட்டத்தை எட்டும் மக்களவை தேர்தல் : 6 ஆம் கட்ட தேர்தல் எத்தனை தொகுதிகளில் நடைபெறுகிறது?
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 5 ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் நடந்து முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு வாக்கு சதவீதத்தை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், 5 ஆம் கட்ட தேர்தலில் 62.2% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. இன்றும் 2 கட்ட தேர்தல்கள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான இறுதிகட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் :
பீகாரில் - 8,
அரியானாவில் - 10
ஜம்மு -காஷ்மீரில் -1
ஜார்கண்டில் - 4 ,
டெல்லியில் - 7,
ஒடிசாவில் - 6 ,
உத்தரபிரதேசத்தில் - 14
மேற்குவங்கத்தில் - 8
தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும் ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் ரஜோரி தொகுதியில் 3ம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!