Election 2024
அமித்ஷா கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள்... கோஷமிட்டு இடத்தை காலி செய்த பாஜகவினர்... வீடியோ வைரல்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குபதிவில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று டெல்லியின் சங்கம் விகார் பகுதியில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையேற்று உரையாற்றினார்.
ஆனால் அங்கே மக்கள்கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தது. ஆட்கள் சேராமல் இருந்த கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றினார். பின்னர் தனது உரையை விரைவாக முடிந்து அங்கிருந்து சென்றுவிட்டார். அமித்ஷா கூட்டத்தில் காலியாக இருந்த நாற்காலிகள் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!