தேர்தல் 2024

“பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் உள்ளது” - மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம்!

பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக ஒடிசாவில் பேசிய மோடிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

“பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் உள்ளது” - மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குபதிவில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று ஒடிசாவில் பூரி தொகுதியில் பிரதமர் மோடி ரோட் ஷோ மேற்கொண்டார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

“பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் உள்ளது” - மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம்!

அப்போது அவர் பேசுகையில், அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளயும், முதல்வர் நவீன் பட்நாயக்கையும் விமர்சித்தார். தொடர்ந்து முதல்வரின் உதவியாளர் வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கில் தமிழ் மக்களை திருடர்கள் என்ற தொனியில் பேசினார். இவரது பேச்சுக்கு தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.

“பூரி ஜெகந்நாதர் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் உள்ளது” - மோடியின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம்!

இதுகுறித்து அவர் பேசுகையில், "பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது" என்று பேசினார். ஒடிசா மக்களின் கோயிலின் கருவூல சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பேசி, தமிழ்நாட்டையும், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் மோடி. இதன்மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே வெறுப்பை விதைக்கும் வகையில் பேசியது அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே எங்கு சென்றாலும் தமிழ்நாடு குறித்தும், தமிழர்கள் குறித்தும் அவதூறாக பேசும் மோடி, தற்போது தமிழ்நாட்டுடன் நட்புறவு இருக்கும் ஒடிசா மக்களிடையே இதுபோன்ற வெறுப்பை விதைக்கும் வகையில் பேசிய மோடிக்கு தமிழ்நாடு மக்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories