Election 2024
அருவருக்கத்தக்க பேச்சு... பாஜக வேட்பாளருக்கு பிரசாரம் மேற்கொள்ள தடை... தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
நாடாளுமன்ற தேர்தல் மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குபதிவில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே ஒவ்வொரு தேர்தல் பிரசாரத்தின்போதும் பாஜகவினர் தனது வரம்புகளை மீறி பேசி வருகின்றனர். இதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையிலும், தனது பேச்சை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த வகையில் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தம்லுக் (Tamluk) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு இவர் தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் கடந்த மே 16-ம் தேதி கிழக்கு மிட்னாபூரின் சைதன்யபூர் என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்ட அபிஜித் கங்கோபாத்யாய், "மம்தா பானர்ஜி அவர்களே உங்கள் விலை ரூ.10 லட்சமா?" என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்த தோடு, இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், தற்போது பாஜக வேட்பாளர் அபிஜித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதிக்கப்ட்டுள்ளது. அதன்படி பாஜக வேட்பாளரும் முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபத்தியா இன்று மாலை 5 மணி முதல் 24 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !