Election 2024
மசூதியை நோக்கி வில் அம்பு எய்வது போல் செய்கை : பாஜக பெண் வேட்பாளரை விரட்டியடித்த பெண்.. வீடியோ வைரல் !
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் பிரசாரத்தின்போது, சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக அதையும் மீறி மதங்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் கூட பிரதமர் மோடி சீக்கிய, இந்து உள்ளிட்ட மதங்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசன் எவ்வழியோ...என்ற பழமொழிக்கு ஏற்ப, மோடியின் ஆதரவாளர்களும் அதே போல் மதங்களை வைத்தே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தெலங்கானா பாஜக வேட்பாளர் ஒருவர் ராம நவமி நிகழ்ச்சியில் பிரசாரம் மேற்கொண்டதோடு, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நேற்று அவர் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் பெண் ஒருவரால் துரத்தியடிக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பாஜக சார்பாக மாதவி லதா போட்டியிடுகிறார். இந்த சூழலில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பினார். மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அருகில் இருந்த மசூதியை நோக்கி, வில் - அம்பு எய்வது போல் செய்கையும் காட்டினார்.
இவரது இந்த செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது ஒரு பெண்ணிடம் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் சட்டென்று அவரை, இங்கிருந்து செல்லுமாறு கூறினார். எனினும் அந்த பெண்ணிடம் மீண்டும் மீண்டும் வாக்கு கேட்டார் பாஜக வேட்பாளர் மாதவி. அப்போதும் அவர் அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதனை அருகில் இருந்தவர் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தபோது, அவரையும் பாஜக வேட்பாளர் மாதவி மிரட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. ராம நவமி நிகழ்ச்சியின்போது மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுப் போல் செய்கை காட்டிய ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, தற்போது பெண் ஒருவரால் விரட்டியடிக்கப்படும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!