DMK
தி.மு.க. தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!
தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழு இணைத்தலைவர், செயலாளர், செய்தித் தொடர்பாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை நியமித்தி அறிக்கை வெளியிட்டுள்ளார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
அதன்படி, சிவகங்கையைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பணிக்குழு செயலாளராக வேலூர் ஞானசேகரன், டாக்டர் விஜய், புதுக்கோட்டையைச் சேர்ந்த பரணி.இ.ஏ.கார்த்திகேயனும், தலைமைக் கழகச் செய்தி தொடர்பாளராக பி.டி.அரசக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீர்மானக் குழு செயலாளராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.ஜி.சம்பத்தும், இணைச் செயலாளராக கோவை முத்துசாமி, தீர்மானக் குழு உறுப்பினர்களாக கோவையைச் சேர்ந்த நாச்சிமுத்துவும், வீரகோபாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க. விவசாய அணி இணைச் செயலாளராக வேதாரண்யத்தைச் சேர்ந்த எஸ்.கே.வேதரத்தினம், ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி என்.சிவக்குமாரும், துணைச் செயலாளராக அன்னியூர் சிவாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கழக மருத்துவ அணி துணைத் தலைவராக திருவண்ணாமலையைச் சேர்ந்த டாக்டர் கம்பனும், இணைத் தலைவராக விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் அணி செயலாளராக திருவொற்றியூர் ஆர்.பத்மநாபன், துணைச் செயலாளராக துறைமுகம் புளோரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!