DMK
பொதுவாழ்வு புயலை எதிர்த்து நிற்பது; அது புரியாதவர்களுக்காக பரிதாபப்படுகிறேன்- ஸ்டாலினுக்கு கலைஞர் கடிதம்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக அ.தி.மு.க-வினர் அவதூறு பரப்பிவரும் நிலையில், மிசா கைது குறித்துக் குறிப்பிட்டு கலைஞர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் மத்திய சிறையிலிருந்து, தற்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 1977ம் ஆண்டு எழுதிய கடிதம்.
அன்புள்ள ஸ்டாலின்,
உனக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி. சாந்தாவுக்கு என் வாழ்த்துகளைக் கூறவும். 1953ல் திருச்சி சிறையில் ஆறுமாத தண்டனை பெற்று நானிருந்தபோது நீ கைக்குழந்தை! வீட்டிலிருந்து என்னைக் காண வருபவர்களோடு குழந்தையாக இருந்த நீயும் வருவாய். இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு சென்னை சிறையில் மிசா கைதியாக (1976) ஓராண்டு நீ இருந்தபோது நான் உன்னைக் காண வந்துகொண்டிருந்தேன்.
உன்னுடனும் கழக உடன்பிறப்புக்களுடனும் தம்பி மாறன் மிசாக் கைதியாக இருந்தபோது அவனுக்கோர் பெண் பிறந்தது. அந்தக் குழந்தையும் தன் தந்தையைப் பார்க்க சிறைச்சாலைக்குத்தான் வந்துகொண்டிருந்தது. இப்போது உனக்குப் பிறந்திருக்கிற என் பேரனும் என்னைப் பார்க்க சிறைக்கு வருவான் என்று கருதுகிறேன். இந்த அனுபவங்கள் எவ்வளவு இனிமையானவை பார்த்தாயா? இந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல நமதியக்கமாம் பெரிய குடும்பத்தில் எத்தனையோ உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட சிறை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன்.
பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல! புயலை எதிர்த்து நிற்பது! இதைப் புரிந்துகொள்ளாத சிலபேர், இன்னமும் நாட்டிலே இருக்கிறார்கள். பாவம்; அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். புதிய பேரனுக்கு என் வாழ்த்துக்கள்!
அன்புள்ள,
மு.கருணாநிதி
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !