Cinema
ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன
மலையாளத்தில் தயாராகியிருக்கும் ஜானகி Vs ஸ்டேட் அஃப் கேரளா திரைப்படம் சான்றிதலுக்காக இந்திய தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 'ஜானகி vs கேரளா ஸ்டேட்' என்கிற படத்தில் கதாநாயகியின் பெயர் புராண பெயர் என்று கூறி தணிக்கை சான்றிதழ் வழங்க இந்திய தணிக்கை குழு மறுப்பு தெரிவித்தது.
இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்திய தணிக்கை குழுவை கண்டித்து, அடுக்கடுக்கான கேள்விகளையும் முன்வைத்தது.
அதனைத் தொடர்ந்து 'ஜானகி vs கேரளா ஸ்டேட்' பட வழக்கு கேரளா உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தின் ஜானகி பெயரோடு நாயகியின் இனிசியலையும் சேர்ந்து ஜானகி. வி ( ஜானகி. வி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா) என்று மாற்றினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயார் என்று தணிக்கை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
படத்தில் நாயகியின் பெயர் ஜானகி வித்யாதரன் என்பதால் வி என்ற இனிஷியல் சேர்த்தால் பிரச்னை இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தில் 2 நிமிட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அப்போது நீதிமன்றம், ஜானகி பெயருக்கும் மத பெயரான சீதை பெயருக்கும் தொடர்பில்லை என்று படத்தில் எழுதி காண்பித்தால் போதாதா? என்று கேள்வி எழுப்பியது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு தணிக்கை குழு முன்வைத்த சிறிய மாற்றத்தை ஏற்க தயாரிப்பாளர் தரப்பு முன்வந்தது. அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்தவுடன் மூன்று நாட்களில் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !