Cinema
”இவர் இயக்கினால் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பேன்” : நடிகர் சத்தியராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். வில்லன் நடிகராக இவர் அறிமுகமானாலும் ’பாகுபலி’, ’கனா’, ’சிகரம் தொடு’ போன்ற பல படங்களில் இவரது குணசித்திர நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
சத்தியராஜ் ’பெரியார்’ படத்தில் பெரியாராக நடித்ததோடு, நிஜ வாழ்க்கையில் பெரியார் கொள்கைகைய கடைபிடிக்கும் பண்பாளரும் கூட. அதனால் தான் ஒன்றிய பா.ஜ.க பாசிச அரசின் தவறான கொள்கைகளையும், திட்டங்களையும் துணிச்சலுடன் எதிர்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் சத்தியராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. உடனே சத்தியராஜ் மறுத்திருந்தார்.
இந்நிலையில் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெற்றிமாறன், ரஞ்சித் இயக்கினால் நன்றாக இருக்கும் என சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் சத்தியராஜ் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நடிகர் சத்தியராஜ், ”பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் நடிக்கவில்லை. மணிவண்ணன் போன்றவர்கள் மோடியின் கதையை இயக்கினால் உண்மையை அப்படியே தத்ரூபமாக எடுப்பார்கள். இப்போதுள்ள தலைமுறை இயக்குநர்களில் விஜய் மில்டன், மாரி செல்வராஜ், பா. இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குநர்கள் இயக்க முன் வந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !