தேர்தல் 2024

“இந்து மதத்தை இழிவுப்படுத்திய மோடி...” - நடிகர் கிஷோர் கடும் விமர்சனம் - பின்னணி என்ன?

மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்பட்டதாக நடிகர் கிஷோர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“இந்து மதத்தை இழிவுப்படுத்திய மோடி...” - நடிகர் கிஷோர் கடும் விமர்சனம் - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தனது ஒவ்வொரு பிரசாரத்தின்போதும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் மத்தியில் இந்து - முஸ்லீம் மத வெறுப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதால், இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கேவலமாக பேசினார்.

மோடியின் வெறுப்பு பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இப்போது வரை அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. மேலும் மாறாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பற்றியும், காங்கிரஸ் பற்றியும் கடும் விமர்சனம் செய்து வருகிறார். மோடிக்கு மக்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

“இந்து மதத்தை இழிவுப்படுத்திய மோடி...” - நடிகர் கிஷோர் கடும் விமர்சனம் - பின்னணி என்ன?

இந்த நிலையில் மோடியின் பேச்சுக்கு நடிகர் கிஷோர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஆமாம். இவர் (மோடி) பொது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, மனிதனாக இருக்கவும் தகுதியில்லாதவர். இவரை போன்ற ஒருவரின் வாய், மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சரிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

“இந்து மதத்தை இழிவுப்படுத்திய மோடி...” - நடிகர் கிஷோர் கடும் விமர்சனம் - பின்னணி என்ன?

அவரது வார்த்தைகள், செயல்பாடுகள் என அனைத்தும், உலகில் அவரை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, அதிக திமிர் கொண்டவர், மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், கீழ்த்தரமானவர், உணர்வற்றவர், மக்களுக்கு எதிரானவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த எதேச்சதிகாரி என யாருமில்லை என்பதை காட்டுகிறது.

பாஜக ஆட்சியில் இருந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும், விவசாயிகள், இராணுவ வீரர்கள், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளின் வளர்ச்சி குறித்தும், செய்த பணிகள் குறித்தும் பேசும் திறன் மோடிக்கு இல்லை. வெறும் பொய் சொல்லி வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். மேலும் கற்பனையாக வாக்கு ஜிகாத், ஊடுருவல்காரர்கள், பாகிஸ்தானியர்கள் என்று இந்த நாட்டு மக்களை கூறி வருகிறார்.

அதோடு பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள் என்றும், கோயில்களை பூட்டிவிடுவார்கள் என்றும் பேசி வருகிறார். இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ, அதேபோல் மோடியால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories