Cinema
தீபாவளி ரிலீஸ்.. எந்த படம் பார்க்கலாம்.. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. முழு பட்டியல் இதோ !
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மொழிகளில் வெளியாகும் பட்டியலை இங்கு பார்க்கலாம்..
>> ஜிகர்தண்டா DOUBLE X - (தமிழ்) :
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா DOUBLE X' படத்தில் ராகவா லாரன்ஸ், SJ சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
>> ஜப்பான் - (தமிழ்) :
கார்த்தி, அணு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை, ராஜு முருகன் இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
>> ரெய்டு - (தமிழ்) :
ஸ்ரீ திவ்யா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
>> கிடா - (தமிழ்) :
ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் காளி வெங்கட், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
>> Bandra - (மலையாளம்) :
திலீப், தமன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை அருண் கோபி இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
>> Garadi - (கன்னடம்) :
யோகராஜ் பட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சொனல், யஷாஸ் சூர்யா, தேஜஸ்வினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
>> டைகர் 3 - (இந்தி - பான் இந்தியா)
இயக்குநர் மனீஷ் சர்மா இயக்கத்தில் சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம்தான் ‘டைகர் 3’. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் 2 பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் தீபாவளியன்று 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
>> The Marvels - (ஆங்கிலம் - பான் இந்தியா)
மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸின் படமான 'The Marvels' திரைப்படம், 2019-ம் ஆண்டு வெளியான ‘கேப்டன் மார்வெல்’, 2021-ம் ஆண்டு வெளியான ‘Ms Marvel’ சீரிஸ் ஆகியவற்றின் தொடர்ச்சியான கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நியா டகோஸ்டா என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ளார். இதில் சியோ-ஜுன் பார்க், ஜாவே அஸ்டன், ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், இமான் வெல்லானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் நவம்பர் 10-ம் தேதி (நாளை) வெளியாகவுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!