Cinema
கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. லியோவுடன் களமிறங்கும் பெரிய தலைகளின் படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'லியோ' படம் வரும் 19-ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்துடன் தமிழ் தவிர பிறமொழிகளில் மாஸ் ஹீரோவாக அறியப்படும் நடிகர்களின் படமும் நேரடியாக வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் பின்வருமாறு :
=> லியோ (Leo) : தமிழ் & பான் இந்தியா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'லியோ' படம் வரும் 19-ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.
=> பகவந்த் கேசரி (Bhagavanth Kesari) : தெலுங்கு
பாலகிருஷ்ணா, ஸ்ரீ லீலா, காஜல் அகர்வால், சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 19-ம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகவுள்ளது.
=> கோஸ்ட் (Ghost) : கன்னடம்
எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சிவராஜ் குமார், விஜய் சேதுபதி, அர்ச்சனா ஜோயஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வரும் 19-ம் தேதி (நாளை மறுநாள்) உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.
=> டைகர் நாகேஸ்வர ராவ் (Tiger Nageswara Rao) : தெலுங்கு & பான் இந்தியா
ரவி தேஜா, நுபுர் சனோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை வம்சி கிருஷ்ணா நாயுடு, வம்சி கிருஷ்ணா அகெல்லா ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த படம் வரும் 20-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
=> கன்பத் (Ganapath) : இந்தி
விகாஸ் பாஹல் இயக்கத்தில் டைகர் ஷ்ரோஃப், கிருத்தி சனோன், அமிதாப் பச்சான் உள்ளிட்ட பலரும் நடித்துள் இந்த படம் வரும் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.
Also Read
-
“தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்!” : உதயநிதி அறிவுறுத்தல்!
-
“அயலகத்தில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய தவெக அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட நிதி.. மலேசியாவில் தவிக்கும் மாணவர்கள்” : அன்பில் மகேஸ் கண்டனம்!
-
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் : அரசின் நடவடிக்கை என்ன? - பேரவையில் மனோஜ் பாண்டியன் கேள்வி!
-
டெண்டரில் முறைகேடு.. முதலமைச்சர் அலுவலகத்திலேயே நடந்த ஊழல்? - பகீர் கிளப்பும் செய்தியின் பின்னணி என்ன?