Cinema
ஜூலை 28 : கோலிவுட் To பாலிவுட்.. தோனி படத்துடன் நேரடியாக போட்டிபோடும் அந்த 5 படங்கள் என்னென்ன ?
வரும் ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கோலிவுட் முதல் பாலிவுட் வரையான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஜூலை 28 :
=> Lets Get Married (LGM) (தமிழ்) :
தோனி எண்டர்டென்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் Lets Get Married (LGM) படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
=> DD Returns (தமிழ்) :
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராவத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் தான் DD Returns - Dare Devil. ஹாரர் படமான இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
=> பீட்சா 3: தி மம்மி (தமிழ்) :
அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காக்மனு, பவித்ரா மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பீட்சா 3: தி மம்மி' படம், வரும் 28-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
=> Love (தமிழ்) :
R.P.பாலா இயக்கத்தில் வாணி போஜன், பரத், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள Love படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
=> டைனோசர்ஸ் - DieNoSirs (தமிழ்) :
உதய் கார்திக், ரிஷி ரித்விக், சாஇ பிரியா தேவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஆர். மாதவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
=> BRO (தெலுங்கு) :
சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண், சாய் தேஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் BRO. தமிழில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் கடந்த 2021-ல் வெளியான ‘வினோதய சித்தம்’ என்ற படத்தின் ரீ-மேக் ஆகும். இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
=> Rocky Aur Rani Ki Prem Kahani (இந்தி)
கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்வீர் சிங் ஆலியா பட், ஜெயா, சபானா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!