Cinema

“அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன்”: விரைவில் உருவாகும் கமல்-நதியா COMBO.. LGM பட நிகழ்ச்சியில் Updates

தமிழில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் Lets Get Married (LGM). கிரிக்கெட் வீரர் 'தோனி எண்டர்டென்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். காமெடி ரோமன்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தோனி, அவரது மனைவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கோவையில் இதன் ப்ரோமோஷன் விழா நடைபெற்றது.

இதில், நதியா, இவானா, ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அனைவரும் பேட்டி அளித்தனர். இது குறித்து பேசிய இவானா, “இந்த படம் நல்லா வந்துருக்கு. பூவே பூச்சுடுவா படத்தை இரண்டு முறை பார்த்து விட்டு தான் நதியா அவர்களை பார்க்க சென்றேன். படம் சூட்டிங் போது என்னை அனைவரும் கலாய்ப்பார்கள். அப்போ நதியா மேம் கவுண்டர் ஒன்னு கொடுத்துருவாங்க. எல்லாரும் அமைதியாக மாறிடுவாங்க. தாப்ரோது தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இன்ஸ்டாவில் வாவ் என்ற ரீல் வைரல் ஆகி உள்ளது. LGM படம் எல்லாருக்கும் பிடிக்கும் அளவிற்கு இருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஹரிஷ் கல்யாண், “கோவை வந்தது சந்தோஷம். LGM படத்தின் இயக்குநரால் இங்கு வர முடியவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. தோனியின் முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. தோனி ஒவ்வொரிடமும் படத்தை பார்த்துவிட்டு தனியாக பேசினார். அவர் குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசித்தார். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. படத்திற்கு தேவைப்பட்டால், காட்சிக்கு தேவைப்பட்டால் தான் அது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பேசவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய ஒரு படமாக வந்துள்ளது” என்றார்.

பின்னர் பேசிய நதியா, “இந்த படத்தில் ஹரிஸோட அம்மாவாக நடித்துள்ளேன். படம் முழுவதும் ஜாலியாக எடுக்கப்பட்டுள்ளது. எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அம்மாவை தனியாக காட்டினார்கள். அதுபோல் இந்த படத்தில் வித்தியாசமாக காட்டி இருக்கிறார்கள். எனக்கு தகுந்த கதை வந்தால் நிச்சயம் நடிப்பேன். தெலுங்கில் அதிக படங்கள் வந்தது. எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம் . தோனி படம் எடுக்கிறார் என கேள்விப்பட்ட போது, அதிர்ச்சி அடைந்தேன். இந்த பட குழுவினருடன் என்னை பார்க்கும் போது பாட்டி போன்று பீல் ஆகிறது. ஆம் சீனியர் நடிகையாக இருப்பதால் அப்படி உணர்கிறேன்.

சென்னைக்கும் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் தான் தமிழில் படம் தயாரித்துள்ளார் சப் டைட்டிலுடன் தான் படத்தை தோனி பார்த்தார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் திரையிடப்படுகிறது. ஆக்‌ஷன் பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன். கமல் சார் உடன் படம் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரும் நடிக்கிறார் நானும் நடிக்கிறேன். நான் எப்பொழுதும் இளமையாக இருக்க உங்க அன்பு தான் காரணம். எல்லாம் சாப்பிட வேண்டும், முதல் மாடி இருந்தாலும் நடந்தே செல்லுங்கள். அதுதான் என் டயட்” என்றார்.

மணிப்பூர் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த நடிகை நதியா, "எது பண்ணினாலும் முன்பாகவே யோசிக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை தர வேண்டும். இதே நிகழ்வு நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும்" என்று வேதனையோடு தெரிவித்தார்.

Also Read: LGM : ‘எனக்கு ஒரு IDEA..’ மாமியாருடன் பழகி பார்க்க நினைக்கும் மருமகள்.. தோனியின் முதல் படத்தின் ட்ரைலர் !