Cinema
மாவீரன் முதல் Mission Impossible 7 வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?
இந்த வாரம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஜூலை 12 :
Mission Impossible: Dead Reckoning - Part One
கிறிஸ்டோபர் மெக்குவாரி (Christopher McQuarrie) இயக்கத்தில் ஹாலிவுட் ஸ்டார் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவான படம் தான் Mission Impossible: Dead Reckoning - Part One. மிஷன் இம்பாசிபிள் (Mission: Impossible) பட வரிசையில் ஏழாவது படமான இந்த படம் இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஜூலை 14 :
>> மாவீரன் (Maaveeran) : தமிழ்
‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘மாவீரன்’. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் ஜுலை 14-ம் தேதி வெளியாகிறது.
>> பாபா ப்ளாக் ஷீப் (Baba Black Sheep) : தமிழ்
ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில் அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.
>> பத்மினி (Padmini) : மலையாளம்
சென்னா ஹெக்டே இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் (Kunchacko Boban), அபர்ணா பாலமுரளி, மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.
>> பேபி (Baby) : தெலுங்கு
சாய் ராஜேஷ் நீளம் இயக்கத்தில் ஆனந்த் தேவர்கொண்டா, விராஜ் அஷ்வின், மெளனிகா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?