Cinema
“ஜப்பான் - Made In இந்தியா” - சிம்பு To ரிஷப் ஷெட்டி வரை.. கார்த்தி பட டீசரை வெளியிட்ட 4 திரை பிரபலங்கள்!
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்தி. சூர்யா தம்பி கார்த்தி என்று பெயர் மாறி, நடிகர் கார்த்தி என்று கூறினாலே அடையாளம் காணும் அளவிற்கு தனது திறமைகளால் தனி ரசிகர்களை கொண்டு பிரபலமானார்.
நடிப்பு மட்டுமின்றி, விவசாயத்திற்காக உழவன் பௌண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையும் நிறுவி வருகிறார். இதனால் இவர் மீது அனைவர்க்கும் தனி மரியாதையும் இருக்கிறது. சினிமா மீது முழு கவனத்தையும் செலுத்தி வரும் இவருக்கு முதல் படமான பருத்திவீரன் படமே பெரியளவில் ஹிட் கொடுத்தது.
அதன்பிறகு பல படங்கள் நடித்தாலும், அதில் சில படங்களே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. குறிப்பாக பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என ஹிட் அடித்த படங்களும் ஏறாளம். அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
தொடர்ந்து தற்போது சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் இவர் நடிப்பில் 'ஜப்பான்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான 'ஜிப்ஸி' படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கியுள்ள இந்த படமானது கார்த்திக்கு 25-ஆவது படமாகும். இதில் அணு இம்மானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடிகர் கார்த்தி தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் டீசரை, அந்தந்த மொழி திரை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தமிழில் நடிகர் சிம்புவும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் வெளியிட்டுள்ளனர். மேலும் மலையாளத்தில் துல்கர் சல்மானும், கன்னடத்தில் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியும் வெளியிட்டுள்ளனர்.
அதோடு இந்த படம் வரும் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிவுள்ளது. இந்த டீசரில் நடிகர் கார்த்தி ஜப்பான் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான உடை, தங்க துப்பாக்கி, தங்க சட்டை, தங்கப் பற்கள் என மாஸாக வருகிறார். ஒருவர் இவரை காமெடியன் என்று சொல்ல மற்றவரோ இவரை டர்ட்டி வில்லன் என்று கூற யார் இந்த ஜப்பான் ? என்று குழப்பமாகவே அமைந்துள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!