Cinema
“ஆனாலும் கடலமுத்து ரொம்ப Strict பா..” -Leo Update கேட்ட ரசிகர்கள்: கடைசி வரை மூச்சுகூட விடாத கெளதம் மேனன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம்தான் லியோ. திரிஷா, அர்ஜுன், மிஸ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், டான்சர் சாண்டி என திரைபட்டாளமே நடித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.
அனிருத் இசையமையக்கும் இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கிறது. லோகேஷுடன் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைந்த விஜய், இந்த முறை இந்த படத்தின் மூலம் LCU-வில் இணைகிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் பெரிய திரைபட்டாளமே நடித்து வருகிறது. இதில் காஷ்மீரில் சில நடிகர்களின் காட்சிகள் மட்டுமே படப்பிடிப்பு செய்யப்படுகிறது. அதில் விஜய், பிரியா ஆனந்த், திரிஷா, மிஸ்கின் உள்ளிட்ட சில முக்கிய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். அங்கு அதிக மைனஸ் டிகிரி குளிரிலும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
மைனஸ் டிகிரி குளிரில் இரவு நேரம் என்றும் பாராமல் முழுமையாக நடைபெற்ற இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் இருந்து நிறைவடைந்தது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் இந்த படத்தின் Crew குழுக்கள் தங்கள் அனுபவத்தை தெரிவித்தனர். அதோடு இந்த கடும் குளிரில் இருந்து மிஸ்கின் பகுதி நிறைவடைந்து கடந்த மாதம் 27-ம் தேதி சென்னை திரும்பினார்.
இதுகுறித்து மிஸ்கின் -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து தன்னுடைய பகுதியை நிறைவு செய்ததாகவும், அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அங்கு மீதம் இருந்த மொத்த படக்குழுவும் சென்னை திரும்பியது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இயக்குநர் கெளதம் மேனன் அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார். அப்போது அவரிடம் ரசிகர்கள் லியோ படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு இதுகுறித்து வெளியில் சொல்ல கூடாது என்று லோகேஷ் கூறியதாக கலகலப்பாக பதிலளித்தார்.
இதுகுறித்து பேசிய கெளதம் மேனன், "நண்பர் லோகேஷ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். படத்தோட அப்டேட் பத்தி ரசிகர்கள் கேப்பாங்க.. எதுவும் சொல்லிடாதீங்க.. கட்டாயப்படுத்தினா, ஷூட்டிங் நல்லா இருந்ததுன்னு சொல்லுங்க என்று கூறினார். ஆனால் உண்மையிலேயே ஷூட்டிங் நல்லா இருந்தது. விஜயுடன் இணைந்து நடித்தது அற்புதமாக இருந்தது. விரைவில் சென்னையில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது" என்றார்.
இருப்பினும் கடைசி வரை லியோ படத்தின் அப்டேட் குறித்து கெளதம் மேனன் எதுவுமே கூறவில்லை என்பதால் லோகேஷை விட கெளதம் மேனன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தும் கிண்டலடித்தும் வருகின்றனர்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!