Cinema
கோலிவுட் முதல் பாலிவுட் வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் அந்த 5 முக்கிய படங்கள்.. பட்டியல் இதோ !
தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.
அந்த வகையில் கடந்த வாரம் திரையரங்கு முதல் ஓடிடி வரை சுமார் 11 படங்கள் வெளியானது. அதில் உதயநிதியின் குறிப்பாக கண்ணை நம்பாதே, காஜல் அகர்வால், யோகிபாபு நடித்த கோஷ்டி, 'குடிமகன்', 'D3', 'ராஜா மகள்', ஹாலிவுட் படமான ஷசாம் உள்ளிட்ட படங்கள் திரையரங்கில் வெளியானது.
இந்த நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் சில திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் இதோ :-
மார்ச் 22 :
கீதா சாக்ஷிகா (தெலுங்கு) - தெலுங்கு படமான இட்னஹ் படத்தை அந்தோணி மாட்டிபள்ளி இயக்கியுள்ளார். ஆதர்ஷ், சித்ரா சுக்லா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ரூபேஷ் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 22-ம் தேதி (நாளை) திரையரங்கில் வெளியாகவுள்ளது.
மார்ச் 23 :
ஜம்பு மகரிஷி - திருச்சி அருகே திருவானை காவலில் ஜீவசமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்தான் 'ஜம்பு மகரிஷி'. இந்த படத்தை புதுமுக இயக்குநர் பாலாஜி எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், வையாபுரி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் மார்ச் 23-ல் வெளியாகவுள்ளது.
மார்ச் 24 :
பருந்தாகுது ஊர்க்குருவி - அறிமுக இயக்குநர் தனபால் கோபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூஸ்ஸோ, காயத்ரி ஐயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், இந்த படம் வரும் மார்ச் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
மார்ச் 24 :
குற்றப்பின்னணி (தமிழ்) - ராட்சன் படத்தில் நடித்த சரவணன்ன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தை இயக்குநர் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தீபாலி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு,நேரு, லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
மார்ச் 24 :
Bheed (இந்தி) - பாலிவுட் படமான இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், பூமி பெட்னேகர், கிருத்திகா கம்ரா, தியா மிர்சா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். Article 15, தப்பாட் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அனுபவ் சின்ஹாதான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் மார்ச் 24-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!