சினிமா

“உன் மடி கிடந்தால் தவி தவிக்கிறதே..” பழையாறையில் ஒரு vibe பாடல்:வெளியானது வந்தியத்தேவன்-குந்தவையின் டூயட்

பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தில் இடம்பெற்றுள்ள "அக நக.." பாடல் வெளியாகியுள்ளது.

“உன் மடி கிடந்தால் தவி தவிக்கிறதே..” பழையாறையில் ஒரு vibe பாடல்:வெளியானது வந்தியத்தேவன்-குந்தவையின் டூயட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

“உன் மடி கிடந்தால் தவி தவிக்கிறதே..” பழையாறையில் ஒரு vibe பாடல்:வெளியானது வந்தியத்தேவன்-குந்தவையின் டூயட்

பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவாக்கத்தில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் படமாக எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடை போட்டது.

“உன் மடி கிடந்தால் தவி தவிக்கிறதே..” பழையாறையில் ஒரு vibe பாடல்:வெளியானது வந்தியத்தேவன்-குந்தவையின் டூயட்

சுமார் 500 கோடி பட்ஜெட்டை அள்ளிய இந்த படம் உலகளவில் பெரும் வெற்றியை ஈட்டியது. கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் இந்திய வெற்றி படங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. இந்த படம் பல்வேறு விருதுகளை குவித்தது. மேலும் இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். தமிழ் சினிமாவின் முக்கிய திரை பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் பெரும் வரவேற்பை பெற்றது.

“உன் மடி கிடந்தால் தவி தவிக்கிறதே..” பழையாறையில் ஒரு vibe பாடல்:வெளியானது வந்தியத்தேவன்-குந்தவையின் டூயட்

இந்த படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இதன் அப்டேட் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சூழலில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.

அதாவது இந்த படத்தில் வந்தியத்தேவனுக்கு, குந்தவைக்கும் உள்ள பாடலான "அக நக.." பாடலின் தீம் மியூசிக் கடந்த பாகத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ பாடியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

பாடல் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் நடிகர் கார்த்தியும், திரிஷாவும் ட்விட்டரில் வந்திதேவன் - குந்தவை காதாபாத்திரமாகவே மாறி, ட்வீட் செய்து ப்ரோமோஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories