தமிழ்நாடு

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

முதலமைச்சரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை அனைத்து தரப்பு மக்களும் வந்து பார்வையிட வேண்டும் என மதுரையில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் வடிவேலு பேட்டி அளித்துள்ளார்.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 1-ம் தேதி தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்காக பல்வேறு இடங்களில் தொண்டர்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்தனர். அதோடு அன்னதானம், இரத்த தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து தற்போது வரை பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் செய்து வரப்படுகிறது.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 70 ஆண்டுகால பொது வாழ்க்கை பயணங்களை புகைப்படங்களாக கண்காட்சியாக சென்னையில் வைக்கப்பட்டது. முதலமைச்சரின் 70 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தை எடுத்துக்கூறும் வகையில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

இந்த புகைப்பட கண்காட்சியில் முதலமைச்சர் கலைஞருடன் இருக்கும் புகைப்படங்கள், ஜெயலலிதா, சோனியா காந்தி என பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு புகைப்படங்கள் உள்ளிட்ட பல இடம்பெற்றுள்ளது. மேலும் திரைபிரபலங்கள் சத்யராஜ், ரஜினி, கமல், விவேக் உள்ளிட்டோர்களுடன் முதலமைச்சர் இருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

அதோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சித்ரவதையை அனுபவித்ததை சித்தரிக்கும் வகையில் சிறை உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை நடிகர் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு முதலமைச்சருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

மேலும் இந்த கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் தின்தோறும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். தொடர்ந்து 13 நாட்கள் நடந்த இந்த புகைப்படக் கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி, மருமகன் சபரீசன், அமைச்சர்கள் மதிவேந்தன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

இதைத்தொடர்ந்து இன்று இந்த புகைப்பட கண்காட்சி மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கருமுத்து கண்ணன், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கொண்டனர்.

இந்த நிலையில் மதுரையில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியின் முதல் நாளான இன்று, நடிகர் வடிவேலு நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து முதலமைச்சர் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு பகுதியை புகைப்பட வாயிலாக கண்டுகளித்த நடிகர் வடிவேலு இதுகுறித்து பேட்டியும் அளித்தார்.

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் வடிவேலு, "மிகப்பெரிய பிரம்மிப்பாக இருக்கிறது. புகைப்படக்கண்காட்சி படங்கள் நிஜங்களாக, வரலாறாக எல்லாவற்றையும் தாங்கி தன்னம்பிக்கை தைரியம் உழைப்புதான் அவரை தமிழ்நாட்டு முதல்வராக்கியது

முதலமைச்சரின் மிசா சிறைவாசம் - “தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது..” - நடிகர் வடிவேலு உருக்கம் !

வரலாறாக படைக்கப்பட்ட இந்த காட்சி, எல்லா மனிதருக்கும் தன்னம்பிக்கை தரும் வரலாறாக இந்தியாவில் உள்ள தலைவர்கள் அனைவரையும் சந்திக்கும் காட்சிகள் ஆக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சிறையில் அனுபவித்த இன்னல்களை தத்ரூபமாக விளக்கும் காட்சி மனதை உலுக்கியது. முதலமைச்சரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை அனைத்து தரப்பு மக்களும் வந்து பார்வையிட வேண்டும்" என்று பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories