Cinema

37 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற பிரபல இயக்குநர்.. ட்விட்டரை கலக்கும் Certificate !

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர்தான் ராம் கோபால் வர்மா. தெலுங்கு திரையுலகில் 1989-ல் 'சிவா' என்றார் படத்தில் இயக்குநராக அறிமுகமான இவர், அதே படத்தை இந்தியில் ரீ-மேக் செய்து இந்தி திரையுலகிலும் அறிமுகமானார். கிரைம் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி என மாறி மாறி படங்களை இயக்கி வந்த இவர், தமிழில் 'திருடா திருடா' படத்தின் மூலம் அறிமுகமானார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு கதையாசிரியர் ராம் கோபால் வர்மாதான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் அடுத்தது இவர் தமிழில் எந்த படங்களிலும் பணியாற்றவில்லை.

தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களுக்கு கதை எழுதி, இயக்கி வரும் இவர் அண்மையில் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதாவது லெஸ்பியன் கிரைம் படமான 'Dangerous' என்ற படத்தை இயக்கினார். இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் கிரைம் படமாக அமைந்துள்ள நிலையில், இது பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.

இதன் ட்ரைலர் வெளியாகி பலரது கண்டனங்களையும் பெற்றது. 18+ படமாக எடுக்கப்பட்ட இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு இந்த படம் வெளியானது. இப்படி சில சிக்கல்கள், சர்ச்சைகளுக்கு பெயர் போன ராம் கோபால் வர்மா, தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு தனது டிகிரி பட்டத்தை வாங்கியுள்ளார்.

அதாவது 1985-ல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் சிவில் படித்து முடித்த இவர், தான் படித்து முடித்த பிறகு தனது டிகிரியை வாங்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சுமார் 37 ஆண்டுகள் கழித்து, கடந்த 15-ம் தேதி பி டெக் டிகிரியை முடித்ததற்கான சான்றிதழை ராம்கோபால் வர்மா ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

படித்துக்கொண்டிரும்போதே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி வகுப்பை கட் செய்துவிட்டு படத்துக்கு சென்றுள்ளார். அதோடு சினிமா மீதுள்ள ஆர்வத்தால் படம் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்த இவர், 37 ஆண்டுகளுக்கு பிறகு தனது டிகிரி சான்றிதழை, பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக சென்று பெற்றுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இவருக்கு சிலர் வாழ்த்து தெரிவித்தும், சிலர் கிண்டலடித்தும் வருகின்றனர்.

Also Read: “ஏழைகளுக்கு தேடிச் சென்று உதவி செய்யும் யூடியூபர்” : ஹர்ஷா சாய் வீடியோ பின்னணி என்ன? - முக்கிய தகவல் இதோ!