Cinema
Mirzapur தொடரில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்.. விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடந்த துயரம்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்தவர் ஷாநவாஸ் பிரதான். இவர் 'எம்.எஸ்.தோனி','தி அன்டோல்டு ஸ்டோரி' ,' லவ் சுதா', 'ரேயீஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் ஓ.டி.டி தொடர்களிலும் நடித்துள்ளார். 'மிர்சாப்பூர்', 'பணயக் கைதிகள்', 'டெக் பாய் டெக்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்தப் படம் 'குடா ஹிபீஸ'.
இந்நிலையில் சில மாதங்களுக்கு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் படங்கள் எதிலும் நடிக்காமல் ஓய்வு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் மும்பையில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ஷாநவாஸ் பிரதான் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளது.
இதைக்கேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 'பாந்தோம்' படத்தில் தீவிரவாதி ஹபீஸ் சயீது பேடம் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!