சினிமா

நீங்கதான் இதற்கு காரணம்.. புதிதாக BMW பைக் வாங்கி நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த துணிவு பட நடிகை!

புதிதாக BMW பைக் வாங்கிய நடிகை மஞ்சு வாரியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்கதான் இதற்கு காரணம்..  புதிதாக BMW பைக் வாங்கி நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த துணிவு பட நடிகை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். இவர் 20க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த முதல் படம் 'அசுரன்'. இந்த முதல்படமே இவருக்குப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. பல தமிழ்ப்பட வாய்ப்புகள் முன்பே வந்து இருந்தாலும் தமிழ் சினிமாவிற்கான கதவை 'அசுரன்' படம்தான் திறந்துவைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார்.

நீங்கதான் இதற்கு காரணம்..  புதிதாக BMW பைக் வாங்கி நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த துணிவு பட நடிகை!
நீங்கதான் இதற்கு காரணம்..  புதிதாக BMW பைக் வாங்கி நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்த துணிவு பட நடிகை!

இதையடுத்து சமீபத்தில் வெளியான 'துணிவு' படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகர் மஞ்சு வாரியர். இதன் பிறகு இவருக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது நடிகர் அஜித்துடன் இணைந்து வெளிநாடுகளில் நடிகர் மஞ்சுவாரியர் BMW இருசக்கர வாகனத்தை ஓட்டும் புகைப்படங்கள் வைரலானது.

இதையடுத்து அஜித் போன்றே இவரும் இருசக்கர வாகன பிரியராக மாறிவிட்டார். நடிகர் அஜித்துடனான இந்த பயணம் இவருக்கு இருசக்கர வாகனத்தின் மீதான ஈர்ப்பை அதிகரித்து விட்டது.

பின்னர் இந்த பயணம் முடித்து உடனே இருசக்கர வாகனத்திற்கான லைசென்ஸ் வாங்கியுள்ளார். பிறகு தனக்குச் சொந்தமாக BMW பைக்கை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து இவர் புக்செய்த BMW பைக்கை ஷோ ரூம் நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

இதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நடிகை மஞ்சுவாரியர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மகிழ்ச்சியான தருணத்திற்கு நடிகர் அஜித் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிரம் பக்கத்தில், "தைரியத்தின் ஒரு சிறிய படி எப்போதும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம். நான் ஒரு நல்ல ரைடராக மாறுவதற்கு முன்பு ஒரு வழி செல்ல வேண்டும்.

அதனால் நான் சாலைகளில் தடுமாறுவதை நீங்கள் பார்த்தால் தயவு செய்து என்னுடன் பொறுமையாக இருங்கள். என்னை போன்ற பலருக்கு உத்வேகமாக இருந்ததற்கு நடிகர் அஜித்குமாருக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories