Cinema

1 மணி நேரத்துக்கு 1.. துணிவு பாணியில் விஜய்67 படத்தின் UPDATE: Universe-ல் இணையும் நடிகர்கள் யார் யார்?

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்தார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. துணிவா? வாரிசா? என்ற போட்டி நிலவி வந்த நிலையில் துணிவுடன் வாரிசு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதன் வெற்றி கொண்டாட்டமும் அண்மையில் படக்குழுவினர் கொண்டாடினர். இதனிடையே விஜயின் 67-வது படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்குவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

வாரிசு படத்தின் வெளியீட்டை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்கள் வரத்தொடங்கியது. அதன்படி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். Seven Screen Studio எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார்.

எடிட்டிங் பிலோமின் ராஜ், இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ், ரத்தின குமார், தீரஜ் வைத்தி ஆகியோர் வசனம் எழுதவுள்ளனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், குழுக்கள் குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்று தெரியவந்தது.

தொடர்ந்து இன்று காலை இந்த படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் வரை சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், விமானத்தில் பயணிக்கவிருக்கும் படக்குழுவின் பெயர்களும் இணையத்தில் வெளியானது. அதில் திரிஷா, பிரியா ஆனந்த் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் இந்த படத்தில் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளதாக ரசிகர்களுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது Seven Screen Studio இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் யார் யார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று அப்டேட் வழங்கி வருகிறது.

அதன்படி முதலில் வெளியான அப்டேட் : இந்த படத்தில் பிரபல இந்தி நடிகரும் KGF 2 வில்லனுமான 'சஞ்சய் தத்' நடிக்கவுள்ளார். இது அவருக்கு முதல் தமிழ் படமாகும்.

இது குறித்து வெளியான புகைப்படத்தில் சஞ்சய் தத் கூறியதாவது ,"இந்தப் படத்தின் ஒன் லைனை நான் கேட்டபோது, அந்தத் தருணத்தில் நான் இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து, இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

இரண்டாவதாக : பிரியா ஆனந்த் - விஜய் படத்தில் இவர் நடிப்பது இதுவே முதல் முறை. இது குறித்து வெளியான புகைப்படத்தில் பிரியா ஆனந்த் கூறியதாவது ,"இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. அத்தகைய நம்பமுடியாத நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்"

மூன்றாவதாக : சாண்டி மாஸ்டர் - ஒரு நடிகராக வெளியாகப்போகும் முதல் பெரிய படம். இது குறித்து வெளியான புகைப்படத்தில் சாண்டி கூறியதாவது ,"லோகேஷ் இயக்கும் இந்தப் படம் மிகவும் மதிப்புமிக்க திட்டமாக, என்னை ஒரு நடிகராகப் பார்ப்பது மிகவும் புதியது. எங்களுடைய ஒரே தளபதியுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் நான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது."

நான்காவதாக: மிஸ்கின் - நடிகராக விஜயின் யூத் படத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து வெளியான புகைப்படத்தில் சாண்டி கூறியதாவது, "21 வருடங்களுக்கு முன்பு நான் விஜய் படத்தில் இணை இயக்குநராக பணிபுரிந்தேன். இத்தனை ஆண்டுகளில் மாறாத ஒன்று, நாம் பகிர்ந்து கொள்ளும் பந்தம். லோகேஷ் மற்றும் நான் கொண்டிருக்கும் பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையின் காரணமாக இது என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது. இந்த படத்தின் மூலம் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்"

ஐந்தாவதாக: மன்சூர் அலிகான் - மின்சாரக்கண்ணா படத்திற்கு பிறகு விஜயுடன் மீண்டும் இந்த படத்தில் இணையவுள்ளார். இது குறித்து வெளியான புகைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறியதாவது,"யாணும் இணைந்தேன் தளபதி 67-ல் லோகேஷ் நீ ஆர்பரித்தெழு. திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே"

ஆறாவதாக: மாத்திவ் தாமஸ் - மலையாளத்தில் கும்பளங்கி நைட்ஸ், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதுவே முதல் முறை. இது குறித்து வெளியான புகைப்படத்தில் மாத்திவ் தாமஸ் கூறியதாவது, "லோகேஷ் இயக்கத்தில் விஜய் சார் படத்தில் நடிப்பது, தமிழில் இதை விட சிறப்பான அறிமுகம் இருக்காது."

ஏழாவதாக: கெளதம் வாசுதேவ் மேனன் - நடிகராக பல முறை திரையில் தோன்றினாலும், முதல் முறை விஜயுடன் இணையவுள்ளார். இது குறித்து வெளியான புகைப்படத்தில் கெளதம் மேனன் கூறியதாவது, "இந்த முறை கேமரா முன் தவிர, தொழில்துறையில் சிறந்தவர்களுடன் தோள் கொடுக்கிறேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி"

எட்டாவதாக: அர்ஜுன் - அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்த பிறகு முதல் முறை விஜயுடன் இணையவுள்ளார். இது குறித்து வெளியான புகைப்படத்தில் அர்ஜுன் கூறியதாவது, "ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ்) வழிநடத்தப்பட்ட மற்றும் கமாண்ட் செய்யப்பட்ட ஒரு சக்திவாய்ந்த கப்பலில் (விஜய் 67).. இது கர்ஜிக்கும் நேரம்"

முன்னதாக அஜித்தின் துணிவு படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களின் பெயரை இதே போன்று ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என்றவாறு படக்குழு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: லோகேஷ்.. திரிஷா.. பிரியா ஆனந்த்.. - T67 படப்பிடிப்புக்கு காஷ்மீர் சென்ற திரைப்பட குழு.. பட்டியல் இதோ !