Cinema
“அன்போ.. அடியோ.. கொஞ்சம் யோசிச்சு கொடு..” - வெளியானது குடும்பங்கள் கொண்டாடும் ‘வாரிசு’ ட்ரைலர் !
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் பல படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. மேலும் விமர்சன ரீதியாக இவரது படங்கள் சில கீழே சென்றாலும், ரசிகர்களின் உற்சாகத்தால் வசூல் ரீதியாக மேலே வரும். அண்மையில் இவரது நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படமும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஜெய சுதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியான நிலையில், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. போட்டி போட்டுகொண்டு வாரிசு - துணிவு படக்குழு தங்கள் படங்களின் அப்டேட்களை அள்ளி வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கூட்டுக்குடும்பம் முக்கியம் என்ற கோணத்தில் எடுக்கப்பட்டதாக இதன் ட்ரைலர் வாயிலாக தெரிய வருகிறது. மொத்தத்தில் குடும்ப படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது வரை 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
முன்னதாக கடந்த 31-ம் தேதி துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருபடங்களும் வரும் பொங்கலை முன்னிட்டு 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!