Cinema
‘திடீரென்று கேட்ட அலறல் சத்தம்.. புகைமூட்டம்..’ - நடிகை கனகா வீட்டில் தீ விபத்து.. நடந்தது என்ன ?
90s கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை கனகா. 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான 'கரகாட்டக்காரன்' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்போதே "மாங்குயிலே பூங்குயிலே.." பாடல் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார்.
முதல் படத்திலேயே இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கனவு கன்னியாக மாறத்தொடங்கிய இவர், பெரிய இடத்து பிள்ளை, எங்க ஊரு ஆட்டுக்காரன், முதல் குரல், அதிசய பிறவி என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர், இறுதியாக சூர்யாவின் 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பிறகு 2007-ம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை அவரது திருமண வாழ்க்கை குறித்த தகவல்கள் பெரிதாக வெளிவரவில்லை.
திரைத்துறைக்கு பல ஆண்டுகளாக இடைவெளி கொடுத்திருக்கும் இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் "நான் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
ஒரு வேளை, நான் மீண்டும் நடிக்க வந்தால் ஒப்பனை முதல் ஹேர்ஸ்டைல் வரை இன்றைக்கு இருப்பதற்கு தகுந்தாற்போல் பல விஷயங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. அவற்றை தான் கற்க தயார்;, இதேபோல் நான் கற்றுக்கொண்டதை பிறருக்கு கற்றுக்கொடுக்கவும் தயார்" என்று கூறியிருந்தார்.
விளம்பரம் தேடும் நோக்கில் கனகா பதிவிட்டிருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், "நான் விளம்பரம் தேடவில்லை. சினிமாவை பற்றி இதுவரை எதுவும் கற்றுக்கொள்ளாமல் இருந்த நான் புதிதாக கற்கலாமா என்று யோசிப்பதாக தான் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தேன்" என்று மற்றொரு வீடியோவும் வெளியிட்டிருந்தார். எனினும் இவரை பற்றி திரையுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முதலாவது தெருவில் நடிகை கனகா வசித்து வரும் கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நேரத்தில் திடீரென அவர் வீட்டில் தீ பிடித்ததால், இதுகுறித்து நடிகை கனகா தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் விரைந்த அவர்கள் உடனே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கனகா வீட்டின் பூஜை அறையில் விளக்கு கீழே விழுந்து தீ பிடித்துள்ளது. அந்த தீ அருகில் இருந்த துணிகள், பொருட்களில் பரவியதால் புகைமூட்டம் காணப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !