Cinema

சர்ச்சைக்கு நடுவே.. உலகின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் - பிரிட்டிஷ் பத்திரிகை கெளரவிப்பு !

ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.

அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், உலகளவில் 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள், பிரபலங்கள், இந்திய படங்கள், பிரபலங்கள், ஆசியாவை சேர்ந்த பிரபலங்கள், imdb-ல் இடம்பிடித்த திரைப்படங்கள், பிரபலங்கள் என அதிகமான பட்டியல்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க பத்திரிகை இதழான 'டைம்' கெளரவித்துள்ளது. மேலும் சில முக்கிய பத்திரிகை நிறுவனங்கள் இந்தாண்டின் சிறந்த நடிகர்கள், படங்கள், பிரபலங்கள் என பட்டியல் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பிரிட்டிஷின் பிரபல பத்திரிகை இதழான 'எம்பையர்' இந்தாண்டின் உலகளவில் சிறந்த நடிகர்கள் 50 பேர் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஹாலிவுட்டில் ஜோக்கர் படத்தில் நடித்த நடிகர், நார்னியா படத்தில் நடித்த வெள்ளை சூனியக்காரி, டைட்டானிக் படத்தில் நடித்த ஜாக், ரோஸ், என பலரும் இடம்பிடித்துள்ளனர்.

அந்த பட்டியலில் இந்திய நடிகரான ஷாருக்கானும் இடம்பிடித்துள்ளார். இந்தியாவில் இருந்து ஷாருக் மட்டும் தான் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அண்மையில் வெளியான பதான் பட பாடல் சர்ச்சை இந்திய அளவில் பெரிதாகி வரும் நிலையில் அந்த படத்திற்கு ஒரு கும்பல் தடை விதிக்க வேண்டும் என கூறி வருகிறது. அதோடு நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பிரிட்டிஷ் நாட்டின் பத்திரிகை இதழ், இந்திய நடிகர் ஷாருக்கானை சிறந்த நடிகர்கள் பட்டியலில் வைத்துள்ளது அவரது ரசிகர்ளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக இதே சர்ச்சையில் நடிகை தீபிகாவுக்கு இந்தியாவில் சிலர் கண்டனங்கள் தெரிவித்து வந்த நிலையில், கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Also Read: “இது மட்டும் சரியா?”: பதான் பாடல் சர்ச்சை -எதிர்க்கும் இந்துத்துவ கும்பலுக்கு பதிலடி கொடுக்கும் தலைவர்கள்