Cinema
“இவங்கதான் என்னோட டீச்சர்..” : ரசிகர்கள் சந்திப்பில் நயனிடம் அறிமுகப்படுத்திய விக்னேஷ் சிவன்.. VIDEO
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவரும் இவரது கணவர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து உருவாக்கிய 'ரெளடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
அதன்படி ரெளடி பிக்சர்ஸின் தயாரிப்பில் அண்மையில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனெக்ட்' படத்தையும் இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு பூமிகா படத்தின் இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நயன்தாராவின் 'மாயா', டாப்ஸியின் 'கேம் ஓவர்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படம், வரும் 22-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேற்று சென்னை, தி நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் இந்த படம் தொடர்பான பிரீமியர் ஷோ நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவும் அவரது கணவரான விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டனர். அப்போது இவர்களை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக திரண்டனர். அதோடு இவர்களிடம் ஆட்டோகிராப், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த ரசிகைகள் கூட்டம் நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கிருந்த ரசிகர்களில் விக்னேஷ் சிவனின் ஆசிரியையும் இருந்துள்ளார். உடனே அவரை நயன்தாராவிடம் காட்டி "இவங்க என்னோடு டீச்சர்" என்று சொல்லி அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர்கள் இருவரும் சரளமாக பேசிக்கொண்டனர்.
அந்த சமயத்தில் அங்கிருந்த ரசிகைகள் கூட்டம், குஷியில் அங்கிருந்த ரசிகைகள் அனைவரும் கத்தி கூச்சலிட்டு மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!