Cinema
கிரிக்கெட் சாம்பியன் யோகி பாபுவுக்கு Surprise Gift கொடுத்த விஜய்.. - காரணம் என்ன ? : ரசிகர்கள் குழப்பம் !
கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.
நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது வாரிசு, அயலான், சலூன், பூமர் அங்கிள் என 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் அடுத்து வெளியாகப்போகும் படங்களானது 'ஓ மை கோஸ்ட்', 'அந்தகன்', 'சதுரங்க வேட்டை 2', 'தமிழரசன்' ஆகும்.
சமீபத்தில் கூட, யோகிபாபு தமிழ் திரையுலகிற்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சூர்யா 42 படப்பிடிப்பில் கேக் வெட்டி அவரது 13 ஆண்டு சினிமா பயணத்தை கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.
இந்த நிலையில், நடிகர் யோகி பாபு தனக்கு நடிகர் விஜய் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இந்த பேட்டை எனக்கு Surprise ஆக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் யோகி பாபுவுக்கு, நடிகர் விஜய் திடீரென்று எதற்காக கிரிக்கெட் பேட்டை பரிசாக கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். முன்னதாக விஜயும் யோகிபாபுவும் மெர்சல், பிகில், சர்க்கார் படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். தற்போது விஜயின் 'வாரிசு' படத்தில் மீண்டும் இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர்.
பிகில் படத்தில் கால் பந்து வீரராக களம் கண்ட யோகி பாபு, மெர்சல் படத்தில் விஜயுடன் கிரிக்கெட் விளையாடும் காட்சியில் நடித்திருப்பார். இதனால் அதன் நினைவாக விஜய் கொடுத்திருக்கலாம் எனவும், அல்லது வாரிசு படத்தில் இது போன்று எதாவது சீன் இருந்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதன் முன்னதாக நடிகர் யோகி பாபு தனது பள்ளி காலத்தில் கிரிக்கெட்டில் மாநில அளவில் வெற்றிபெற்று சாம்பியனாக பட்டம் பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை கடந்த 2020-ம் ஆண்டு அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனவே யோகி பாபுவை மகிழ்விக்க அவரது விருப்ப விளையாட்டிற்காக கிரிக்கெட் பேட்டை பரிசாக நடிகர் விஜய் கொடுத்திருக்கலாம் எனவும் கிசுகிசுக்க படுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!