வைரல்

இப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகரா.. ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்ன தெரியுமா?

ஆபரேஷன் தியேட்டரில் அறுவைச் சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் கால்பந்து போட்டியைப் பார்க்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகரா.. ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள் முடிந்து தற்போது கால் இறுதிபோட்டியை எட்டியுள்ளது.

இன்று நடைபெறும் கால்இறுதி போட்டியில் அர்ஜெண்டினா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பிரேசில் - குரேஷியான அணிகள் விளையாடுகின்றன. இதனால் கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சையின் போது நோயாளி ஒருவர் கால்பந்து போட்டியைப் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ஆனந்த் மகிந்த்ரா ஆச்சரியப்பட்டு ட்விட்டர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், இவரும் ஏதாவது ஒரு கோப்பைக்கு தகுதியானவர் தானே? என ஆனந்த் மகிந்த்ரா FIFA-வுக்கு டேக் செய்து குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் போலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்தது என தெரியவந்துள்ளது.

இப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகரா.. ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்ன தெரியுமா?

அந்த நோயாளி ஈரான் - வேல்ஸ் போட்டியைக் காண ஆசைப்பட்டுள்ளார். போட்டி நடைபெறும் நேரத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆபரேஷன் தியேட்டரில் TV ஏற்பாடு செய்து கால்பந்து போட்டியை காண உதவ முடியுமான என மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

அவரின் ஆசைப்படியே மருத்துவர்களும் ஆபரேஷன் தியேட்டரில்TV ஒன்று ஏற்பாடு செய்து காபல்பந்து போட்டியைக் காண வைத்துள்ளனர். மருத்துவர்களும் அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை செய்துமுடித்துள்ளனர். அவரும் உற்சாகமாகக் கால்பந்து போட்டியைக் கண்டுகளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories