Cinema
“சில்லா.. சில்லா.. சில்லா.. இனி எல்லா நாளும் சில்லா” : ‘துணிவு’ படத்தின் முதல் சிங்கிள் - Vibe ஆன fans.!
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சில தோல்வியை தழுவினாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களால் தூக்கி விடும். இதனாலே இவர் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்டாராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல கேளிக்கையான விஷயத்தை செய்து வந்தனர். இருப்பினும் இந்த படத்தில் அப்டேட்-ஐ படக்குழுவினர் ரகசியமாகவே வைத்திருந்தனர். எனினும் படம் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முன்னதாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' என்ற பாடல் இன்று வெளியானது.
முன்னதாக இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தயாரிப்பாளர் போனி கபூர், "காத்திருப்பு முடிந்தது.. டிசம்பர் 9 முதல் உங்கள் Playlist-ஐ Chilla Chilla ஆள வருகிறது" என்று பதிவிட்டிருந்தார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!