Cinema

“Tum hi ho” பாடகரின் Concert ஷோ.. ஒரு நபருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.16 லட்சமா..? - ரசிகர்கள் புலம்பல் !

பாலிவுட்டில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'MURDER 2' படத்தின் மூலம் இந்தி பாடகராக அறிமுகமானவர் அரிஜித் சிங். அதன்பிறகு பல்வேறு படங்களில் பின்னணி பாடகராக பாடி பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 2013-ம் ஆண்டு வெளியான 'ஆஷிக் 2' படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களிடம் அறிமுகமானார்.

அந்த படத்தில் இடம்பெற்ற 'தும் ஹி ஹோ' பாடலை அணைத்து மொழியினரையும் கவர்ந்தது. அதன்பிறகு அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்த இவரது வசீக குரலால் மேலும் பல பாடல்களை பாடினார். இந்தி மட்டுமல்லாமல் பெங்காலி, மராத்தி, தெலுங்கு, கன்னடா, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார்.

தமிழில் ஜெய்யின் 'புகழ்' படத்தில் இடம்பெற்ற "அடடா என்ன அழகு.." பாடலையும், சூர்யா - சமந்தா நடிப்பில் வெளியான '24' படத்தில் "நான்..உன் அழகினிலே.." பாடலையும் பாடியுள்ளார். மேலும் அண்மையில் பான் இந்தியா படமாக வெளியான 'பிரம்மாஸ்திரா 1' படத்தின் "தேவா தேவா" பாடலை அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.

இவருக்கு இந்தியாவையும் தாண்டி உலகளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஆண்டுதோறும் இவரது குரலில் வெவ்வேறு இடங்களில் Concert ஷோ நடைபெறும். இந்த வகையில் வரும் ஜனவரி மாதம் 27-ம் தேதி இவரது Concert ஷோ பூனேவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு முறையும் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்தாண்டு ஷோ பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது இவரது ஷோவிற்கு டிக்கெட் கட்டணம் ரூ.999- ல் தொடங்கி ரூ.16 லட்சம் வரை கட்டணம் இருக்கிறது. அதில் குறைந்த விலையில் நிற்கும் பகுதியான Bronze (ப்ரோன்ஸ்) டிக்கெட்டுகள் ரூ.999 விலையும், அடுத்ததாக நிற்கும் இடம் Silver (சில்வர்) ரூ.1,999 விலையும், அமர்ந்து பார்க்கும் இடம் Gold (தங்கம்) ரூ. 4999 விலையும், (முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை) நிர்ணயக்கப்பட்டுள்ளது.

மேலும் Platinum Left (பிளாட்டினம் லெப்ட்) மற்றும் Platinum Right (பிளாட்டினம் ரைட்) ரூ. 6999 கட்டணமும், Diamond Left (வைரம் லெப்ட்) மற்றும் Diamond Right (வைரம் ரைட்) ரூ. 8999 கட்டணமும் விலையாகவுள்ளது. அதோடு பின்னர் PL என்று சொல்லப்படும் 'பிரீமியம் லவுஞ்ச்' பிரிவுகள் 4 பிரிவுகளைக் கொண்டவை - PL 1 - PL 4. இந்த டிக்கெட்டுகள் ரூ. 10 லட்சத்தில் இருந்து தொடங்கும்; இதில் உணவு, பிரீமியம் மதுபானம் உள்ளிட்டவை அடங்கும். PL 1 டிக்கெட்டின் விலை ஒவ்வொன்றும் ரூ.16,00,000.

இந்த டிக்கெட்டின் விலையை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இது குறித்து தங்களது சமூக வலைதளங்களின் வாயிலாக புலம்பி வருகின்றனர். அரிஜித் சிங் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போதெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நிலையில், டிக்கெட்டுகளின் விலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: எத்தனை நிமிடம்.. யாருடைய பாட்டை அதிகம் கேட்டு இருக்கீங்க? : அறிமுகமானது 'SPOTIFY WRAPPED 2022'..