Cinema
பிரம்மாஸ்திரா 2 படத்தில் KGF கதாநாயகனா? - இயக்குநர் கூறிய அதிர்ச்சி பதிலால் ரசிகர்கள் கவலை !
KGF 1, 2 கதாநாயகனான யாஷ், பிரம்மாஸ்திரா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவருக்கும் பிரபல நடிகை ஆலியா பட்டிற்கும் சமீபத்தில் திருமணமானது. இவர்களது திருமணத்திற்கு பிறகு வெளியான திரைப்படம் தான் 'பிரம்மாஸ்திரா'.
ஆன்மீக கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வசூலையும் ஈட்டியது.
இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்போவதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், அதில், kgf கதாநாயகன் யஷ்ஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக யஷ்க்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து பிரம்மாஸ்ரா பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் மறுத்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், தாங்கள் எந்தவொரு கதயநாயகயும் இதுவரை அணுகவில்லை என்றும், இது குப்பை என்றும் கூறியுள்ளார்.
இவரது பதில் தற்போது யஷின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை தேவ் கதாபாத்தித்தில் நடிக்கவைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 3 பகுதியாக வெளியாகும் பிரம்மாஸ்ரா படம், அடுத்தாண்டு 2-ம் பாகமும், அதற்கு அடுத்தாண்டு 3-ம் பாகமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?
-
முதலமைச்சரின் தீர்மானம் - “இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு உறைக்குமா ?” :ஆளுநரை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !