Cinema

புற்றுநோயால் சிறுவன் உயிரிழப்பு.. ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட Chhello Show படக்குழு அதிர்ச்சி!

2023ம் ஆண்டு நடைபெற உள்ள 95வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவிலிருந்து குஜராத் படமான Chhello Show தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 6 சிறுவர்களை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் மீது கூடுதல் கவனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் Chhello Show படத்தில் நடத்த ராகுல் கோலி என்ற 10 வயது சிறுவன் புற்று நோயால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹப்பா நகரைச் சேர்ந்தவன் ராகுல் கோலி. இவரது தந்தை ரிக்ஷா ஓட்டும் கூலி தொழிலாளியான ராமு கோலி. வறுமையான குடும்ப பின்னணியைக் கொண்ட ராகுல் கோலிக்கு Chhello Show படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த படத்திற்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கையே மாறும் என சிறுவன் ராகுல் கோலி தனது தெரிவித்து வந்த நிலையில் அவரது உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை அவரது பெற்றோருக்குக் கொடுத்துள்ளது.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் ராகுல் கோலிக்கு புற்று நோய் இருந்தது தெரியவந்துள்ளது. இதற்காகக் கடந்த 4 மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகுல் கோலி உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்புக்கு Chhello Show படக்குழு மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: விறுவிறுப்பான த்ரில்லர் திரைக்கதை.. பரபரப்பான அனுபவத்தை தரும் ‘ஈஷோ’ திரைப்படம்.. #MovieReview!