Cinema
நடிகர் விஷால் வீட்டின் கண்ணாடி உடைப்பு.. காரில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால். மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளராகவும் நடிகர் விஷால் உள்ளார். இவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் தங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரில் வந்த மர்ம நபர் நபர்கள் நடிகர் விஷால் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து நடிகர் விஷால் சார்பாக மேலாளர் ஹரி கிரிஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன, இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையும் இந்த புகாரில் இணைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள அரவது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“விஸ்வகுரு, விசுவாசம் இல்லாத குருவாகக் காட்டிக் கொண்டுவிட்டார்” - மோடியை விமர்சித்த முரசொலி தலையங்கம்!
-
“பள்ளி விடுமுறை நாட்களில்தான் கூட்டம் கூட்டுவார்..” - விஜய்க்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி!
-
“இதையெல்லாம் 50 வருடங்களாக பார்த்துவிட்டேன்..” - அவதூறு பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக.. அண்ணா பிறந்தநாளில் அன்புக்கரங்கள் திட்டம் - தொடங்கி வைக்கிறார் முதல்வர்!
-
கிருஷ்ணகிரியில் 2 லட்ச பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.. வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!