Cinema
"நாம ஜெயிச்சுட்டோம் மாறா..." - இப்படி ஒரு பிறந்த நாள் பரிசா ? தேசிய விருதை வென்ற சூர்யா.!
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 - ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சூரரைப்போற்று'. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, உடுமலை கலாம், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியம், கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட திரைபிரபலங்கள் நடித்துள்ளனர்.
'Simply Fly: A Deccan Odyssey' என்ற புத்தக கதையை தழுவி எடுத்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் தற்போது நடைபெறும் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் 2020-ல் சிறந்த திரைப்படத்திற்கான விருதை நடிகர் விருது நடிகர் சூர்யாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்ட்டுள்ளது. அதோடு 'சூரரை போற்று' படத்திற்கு, சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, படம் என மொத்தம் 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா நாளை (ஜூலை 23) தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கும் நிலையில், தற்போது அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவித்துள்ளது அவரை மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
68-வது தேசிய திரைப்பட விருது 2020-க்கான சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கான் ஆகிய இருவருக்கும் பிரித்து வழங்கி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!