Cinema
நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி : திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவர்களின் ஆலோசனை என்ன?
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வளம் வருபவர் விக்ரம். தனது வித்தியாசமான நடிப்பு திறமையால் சக நடிகர்களையே ரசிகர்களாக கொண்டவர்.
அண்மையில் நடிகர் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ’மகான்’ திரைப்படம் அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் நடிகர் விக்ரம் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் கண்காணிப்புக்குப் பின் 2 நாட்களில் விக்ரம் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மாலை நடைபெறும் பொன்னியின் செல்வன் பட டீசர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிகிறது.
Also Read
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை ஈட்டுவாரா முதலமைச்சர்?” : டி.ஆர்.பி.ராஜா கேள்வி!
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!