Cinema
பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்.. மாமல்லபுரத்தில் குவிந்த திரை நட்சத்திரங்கள்!
தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டு ஐயா படத்தில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இதையடுத்து இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் கனவு நாயகியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா சில ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இதையடுத்து இவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அண்மையில் இருவரும் அறிவித்தனர். இதையடுத்து திருமண பத்திரிகையை நடிகர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினர்.
இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, விஜய்சேதுபதி, கார்த்தி, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதேபோல் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் திருமணத்தில் பங்கேற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரையும் வாழ்த்தியுள்ளார். மேலும் இயக்குநர்கள் கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார், மணிரத்னம் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் உள்ளிட்ட பலரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். மேலும் ட்விட்டரில் #Nayanthara #Nayantharawedding ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகின்றன.
மேலும் திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் இந்த கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
Also Read
-
தூத்துக்குடி விமான நிலையம்... நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு... உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு !
-
சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு !
-
“மருத்துமனையிலும் மக்கள் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
-
“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!