சினிமா

இயக்குநர், உதவி இயக்குநர்கள் அடுத்து சூர்யாவுக்கு பெரிய பரிசு கொடுத்த கமல்.. வி.சேவுக்கு இதுவா?

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சூர்யாவிற்கு, கமலஹாசன் ரோலக்ஸ் கடிகாரத்தைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இயக்குநர், உதவி இயக்குநர்கள் அடுத்து சூர்யாவுக்கு பெரிய பரிசு கொடுத்த கமல்.. வி.சேவுக்கு இதுவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமலஹாசனின் ‘விக்ரம்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. மேலும் படம் வெளியான ஒருவாரத்திற்குள் 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு கமலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாஸ் படமாக 'விக்ரம்' அமைத்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் கமல் உள்ளார்.

இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்துப் படத்தின் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் சொகுசு காரை பரிசாக வழங்கினார். அதேபோல், படத்தின் உதவி உதவி இயக்குநர்களுக்கும் TVS Apache RTP 160 பக்கை பரிசாக கொடுத்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் இறுதி காட்சியில் 2 நிமிடமே வந்தாலும் கமல் உட்பட அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார் நடிகர் சூர்யா. மேலும் இப்படத்தின் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் 'ரோலக்ஸ்'. இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்.

இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில், "அண்ணா எப்படி சொல்றது?.. உங்களுடன் திரையில் வரும் கனவு நனவாகியுள்ளது. இதைச் செய்ததற்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

இயக்குநர், உதவி இயக்குநர்கள் அடுத்து நடிகர் சூர்யாவிற்கும் பரிசு கொடுத்துள்ளார் கமல். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு என்ன பரிசை கமல் கொடுக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories