Cinema
KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2 பட ஷூட்டிங்.. இயக்குநரின் செயலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் - 2 படம் உலகளவில் 900 கோடி ரூபாய்க்கு வசூலித்து மற்ற இந்திய படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.
இதனால் இந்திய சினிமாக்களின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை KGF-2க்கு முன் பின் என பிரித்து பார்க்கும் அளவுக்கு அனைவரையும் KGF - 2 மலைத்துப்போகச் செய்திருக்கிறது.
அந்த வகையில், அல்லு அர்ஜூன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.
ஆனால் யாஷின் கேஜிஎஃப்-2 இந்தியில் 300 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. மேலும் கேஜிஎஃப்-2 பார்த்த புஷ்பா பட இயக்குநர் சுகுமார் முக்கியமான முடிவொன்றை எடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கேஜிஎஃப்-2 படத்தில் அனைத்து காட்சிகளையும் அசாத்தியப்படுத்தியிருந்ததால் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காட்சியமைப்பை மெருகேற்றுவதற்காக புஷ்பா - 2 படத்தின் படபிடிப்பை இயக்குநர் சுகுமார் நிறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பிறகு படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!