சினிமா

ரஜினியின் சாதனையை முறியடித்த யாஷ்.. வெளியானது மான்ஸ்டர் பாடல்.. பட்டையக்கிளப்பும் KGF-2..!

ரஜினியின் சாதனையை முறியடித்த யாஷ்.. வெளியானது மான்ஸ்டர் பாடல்.. பட்டையக்கிளப்பும் KGF-2..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீண்டும் 'வாடிவாசல்' ஒத்திகை படப்பிடிப்பில் சூர்யா...

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் அடுத்தகட்ட ஒத்திகை படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சூர்யா நேற்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அஜித்-ஷாலினியின் 22வது திருமண நாள்...

அமர்களம் திரைப்படத்தில் துவங்கிய அஜித் - ஷாலினியின் காதல் வாழ்க்கை 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் வாழ்வில் இணைந்தது. இன்றுடன் இவர்களுக்கு திருமணமாகி 22ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்த ஹேஷ்டேக்குகளை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ரஜினியின் சாதனையை பின்னுக்கு தள்ளியது 'கேஜிஎஃப் 2'...

அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், பாகுபலி மற்றும் 2.0 ஆகிய நான்கு படங்கள் உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘கேஜிஎப் 2’ திரைப்படம் 6 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து 5.5 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்த ரஜினியின் ‘2.0’ படத்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கன்னட திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் ஆறு மில்லியன் டாலர் வசூல் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சார்யா படத்தில் இருந்து வெளியான ‘நீலாம்பரி’ பாடல்...

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி அவரது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ஆச்சார்யா. இப்படம் வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஆச்சார்யா படத்தின் நீலாம்பரி பாடல் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் இருந்து வெளியான ‘மான்ஸ்டர்’ பாடல்...

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வெளியாகி உலகமெங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள இந்த படத்தில் இருந்து ‘மான்ஸ்டர்’ பாடல் வெளியாகி இனையத்தில் வைரலாகி வருகிறது. கேங்ஸ்டர் படங்களில் புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories