சினிமா

அஜித் 62க்கு முன்பே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்? வெளியானது அண்மைத் தகவல்!

அஜித் 62க்கு முன்பே விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்? வெளியானது அண்மைத் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. விரைவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்..?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்க இருக்கும் அஜித்தின் 62வது படத்திற்கு முன்னதாக நடைப்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் மாதம் திருமண தேதி அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

2. கார்த்தி குறித்து இனையத்தில் வைரலாகு ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் பதில்..!

இந்திய திரை உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மன் நடிகர் கார்த்தி பற்றி கூறியது தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் பாலிவுட் நடிகர்களான அமிதாப்பச்சன் மற்றும் ரன்வீர் சிங் அடுத்து நடிகர் கார்த்தியுடன் பணிப்புரியவே தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

3. 'கூகுள் குட்டப்பா' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ எனும் தலைப்பில் படமாக்கியுள்ளனர். இதில் கே.எஸ்.ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் படத்தை வரும் மே 6ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் துவங்கியுள்ளன.

4. கமல்-ரஜினி நடிக்க இருந்த படத்தில் விஜய்? லோகேஷுடன் கூட்டணி அமைக்கவிருக்கும் விஜய்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவர்கள் காம்போவில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் அந்த கதை லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக எழுதியது என்றும் அதில் விஜய்க்காக சில மாற்றங்களை செய்து அவருக்கு கதை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் இயக்குவார் எனும் எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

5.அமெரிக்க பல்கலை கழகத்தில் சிறப்பு கவுரம் பெற்ற நடிகர் மனோபாலா..!

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை கலைஞர் எனப்பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகர் மனோபாலாவிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், நகைச்சுவை கலைஞர் எனப்பல துறைகளிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகர் மனோபாலாவிற்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத்தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் அமெரிக்க பல்கலைக்கழகம் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories