Cinema

"உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா” : பட்டித்தொட்டியெங்கும் கலக்கும் விஜய்யின் பீஸ்ட் பட வசனம்!

நெல்சன் இயக்கத்தில் விஜயின் 65வது படமாக உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது `பீஸ்ட்'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஸ்ட் வெளியானது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் பேசிய ஒரு வசனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், படத்தின் ஒரு காட்சியில் "உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா. எல்லா தடவையும் இந்தில ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு இருக்க முடியாது" எனப் பேசியிருப்பார் விஜய்.

இந்த வசனம் விஜய் ரசிகர்களை தாண்டி பல தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது. ஏனெனில், இந்திதான் இந்தியாவின் மொழி என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சியும் அது சார்ந்த உறுப்பு கட்சிகளும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

Also Read: 5in1_Cinema | இளசுகளின் கீதமான TwoTwoTwo பாடல் வீடியோ வெளியாகிறது.. OTT ரிலீசுக்கு சென்ற ஜி.வி. படம்..!

அதன்படி அண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அவரது பேச்சுக்கு எதிர்ப்பும் வலுத்துக்கொண்டு வருகிறது.

இப்படியான சூழலில் இந்தி திணிப்பை எதிர்க்கும் வகையில் நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் பேசியிருக்கும் வசனம் பட்டித்தொட்டியெங்கும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோக்கள், பதிவுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் மொழியே இருக்கும் எனக் கூறியிருந்ததும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Also Read: “வேற லெவல்.. வேற லெவல்!” : ‘பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகம்!