சினிமா

“வேற லெவல்.. வேற லெவல்!” : ‘பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகம்!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“வேற லெவல்.. வேற லெவல்!” : ‘பீஸ்ட்' படம் பார்த்த ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும், உலக நாடுகள் பலவற்றிலும் பெரும்பாலான திரையரங்குகளில் ‘பீஸ்ட்’ இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த, இப்படத்தைக் காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குவிந்தனர்.

தொடர்ந்து படத்தின் கட்-அவுட்டிற்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் படத்தை வரவேற்றனர். தொடர்ந்து திரையில் விஜய்யை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.

பீஸ்ட் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தில் எப்போதும் போல விஜய் சிறப்பாக நடித்திருப்பதாகவும், கதை விறுவிறுப்பாகச் செல்வதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories