Cinema
பிரபல நடிகை வீட்டில் ரூ.2.4 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு.. திரையுலகில் கடும் அதிர்ச்சி!
நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான இவர் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான ‘ராஞ்சனா’ படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
சோனம் கபூர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த சோனம் கபூர், தற்போது கர்ப்பமாக இருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சோனம் கபூரின் வீட்டில் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகை சோனம் கபூரின் மாமியார் அம்ரிதா இதுதொடர்பாக டெல்லியில் உள்ள துக்ளக் ரோடு போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தனது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்ததாகவும், அப்போது பணம் மற்றும் ரூ.1.14 கோடி மதிப்பிலான நகைகள் திருடுபோனது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சோனம் கபூர் வீட்டில் வேலை பார்க்கும் டிரைவர்கள், தோட்டக்காரர், சமையல்காரர் என சுமார் 30 பேரிடம் போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
-
150 ஆவது பொய் - முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா? : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டில் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்!” : துணை முதலமைச்சர் வாழ்த்து!