Cinema
ஓ பேபி, தங்கமே.. : வெளியானது காத்துவாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸ் தேதி!
நானும் ரவுடி தான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மற்றொரு நாயகியாக சமந்தாவும் நடித்திருக்கிறார்.
ராம்போ, கண்மணி, கதீஜா என்ற கதாப்பாத்திரத்தின் பெயரில் மூவரும் நடித்திருக்கும் கதை முக்கோண காதலை முன்வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
Two Two Two, நான் பிழை என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை இரு வகையிலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது படக்குழு.
இந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், விக்னேஷ் சிவனின் வழக்கமான காமெடி அம்சங்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் கொரோனா காரணமாக தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்த படத்தின் வெளியீடு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 28ம் தேதிக்கு சாத்தியப்பட இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது. படத்தில் பிரபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!