Cinema
உதயநிதி ஸ்டாலின் நடிக்க மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் : தகவல்கள் இதோ!
நடிகர் உதயநிதி ஸ்டாலின் 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரையில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். கர்ணன் படத்திற்குப் பிறகு தனுஷ், துருவ் விக்ரம் நடிக்கும் படங்களை இயக்கி வருகிறார்.முதலில் இந்த படங்களை இயக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் படத்தை முதலில் இயக்க உள்ளார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில். நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து அடுத்தப்படமாக இயக்குநர் மாரி செல்வராஜ் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !