Cinema
நடிகை பூனம் பாண்டேவை அடித்து சித்திரவதை செய்த கணவர்... கைது செய்த போலிஸ் : நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் நடிகையான பூணம் பாண்டே, சாம் பாம்பே என்பவரைக் காதலித்து 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் மும்பையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் திடீரென பூனம் பாண்டேவுக்கும் அவரது கணவர் சாம் பாம்பேவுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சண்டையில் பலத்த காயமடைந்த நடிகை பூனம் பாண்டே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதையடுத்து கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலிஸார் சாம் பாம்பேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் பூனம் பாண்டேவுக்கும், சாம் பாம்பேவுக்கும் இப்படி சண்டை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2020ஆம் ஆண்டு இதேபோன்று சண்டை ஏற்பட்டுள்ளது.
திருமணம் முடிந்து இருவரும் தேனிலவுக்குச் சென்றபோது சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னை தாக்கியதாகக் காவல் நிலையத்தில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் அவரை கைது செய்து பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.
இதையடுத்து கணவரிடமிருந்து பிரிவதாக பூனம் பாண்டே கூறினார். ஆனால் சில நாட்களிலேயே இருவரும் இணைந்துவிட்டனர். இந்நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!