Cinema
“மறுக்கப்பட்ட நீதி, அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்” : மிரட்டும் ‘ஜெய் பீம்’ டீசர்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ஜெய் பீம்’ திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜெய்பீம் திரைப்படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ஜெய் பீம்’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் பழங்குடி மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது ஜெய்பீம் படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!