சினிமா

சிறுத்தை சிவாவுடன் கூட்டு சேரும் சூர்யா: தள்ளிப்போகிறதா வாடிவாசல் பட வேலைகள்? அண்மைத் தகவல்கள் இதுதான்!

தனியாக இருந்த கைம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நாகை மாவட்ட அதிமுக மீனவரணி இணைச் செயலாளர் விநாயக மூர்த்தி தலைமறைவு. மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சிறுத்தை சிவாவுடன் கூட்டு சேரும் சூர்யா: தள்ளிப்போகிறதா வாடிவாசல் பட வேலைகள்? அண்மைத் தகவல்கள் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் ‘அண்ணாத்த’. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி ட்ரெண்டான நிலையில், படத்தின் ரிலீஸை தீபாவாளிக்கு திட்டமிட்டு படபிடிப்புக்கு பிந்தைய வேலைகளை தீவிரமாக கவனித்து வருகின்றார் இயக்குநர் சிவா.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸுக்கான வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த இரு படங்களுக்கும் முன்னதாக சூர்யா - சிவா கூட்டணி அமைக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது. ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39வது படமாக உருவாகவிருந்த இந்த படம் சன் பிக்சர்ஸின் அடுத்தடுத்த படங்களினால் தள்ளி வைக்கப்பட்டது.

சிறுத்தை சிவாவுடன் கூட்டு சேரும் சூர்யா: தள்ளிப்போகிறதா வாடிவாசல் பட வேலைகள்? அண்மைத் தகவல்கள் இதுதான்!

தற்போது சூர்யா வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திற்காக தன்னை தயார் செய்துக் கொண்டிருக்கிறார். சிவா அண்ணாத்த இறுதி வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அண்ணாத்த ரிலீஸுக்கு பிறகு சிவா சூர்யாவின் படத்திற்கான ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகளை துவங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்கான வேலைகளை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் துவங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆகவே வெற்றிமாறனின் வாடிவாசல் படபிடிப்பு தள்ளிப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் பேசப்படுகிறடு.

banner

Related Stories

Related Stories